திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Saturday, October 30, 2010

சட்ட மேலவை யாருக்காக தமிழ்நாடு சட்ட மேலவை ஒரு கண்ணோட்டம் நன்றி - தீக்கதிர் - 13-10-2010

ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை ஆள்வதற்காக, அவர்களின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டதுதான் சட்ட மேலவையாகும். 1861ல் பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம்-1861 மூலம் இந்த அவையை உருவாக்கியது. அப்போது ஆளுனருக்கு பரிந்துரைகள் வழங் கும் அவையாகவே இது செயல்பட்டுவந்தது. இந்த அவையில் நான்கு இந்திய உறுப்பினர் கள் மட்டும் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆளுநரே அவையின் தலைவராக இருந்துவந்தார். இரட்டை ஆட்சி முறை 1935-ல் ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது. அப்போது சென்னை மாகாண சட்டமன்றம் இரு அவைகளாக மாற்றப் பட்டது. 215 உறுப்பினர்களைக் கொண்ட கீழ வையும், 54 முதல் 56 வரை உறுப்பினர்களைக் கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. மேலவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத அவையாக இருந்தது. உறுப்பினர்கள் பதவிக் காலம் ஆறு ஆண்டுகாலமாகவும், மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இரு ஆண்டு களுக்கு ஒரு முறை ஓய்வு பெறும் வகையில் நியமனம் செய்யப்பட்டனர். இந்தியா 1947ல் விடுதலையடைந்து 1950-ல் குடியரசு நாடானவுடன், இந்திய அர சியல் சட்டத்தின்படி மாநிலங்களில் மேலவை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. சென்னை மாகாணம் பிரிக்கப் பட்டு ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 51 ஆக குறைந்தது. 1956-ல் 50 ஆக மீண்டும் குறைந்தது. 1957-ல் 63 ஆக உயர்ந்து 1986ல் அவை கலைக்கப்படும் வரை 63 எண்ணிக் கை தொடர்ந்து இருந்து வந்தது.தமிழ்நாட்டில் 1986-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை அண்ணா திமுக அரசால் கலைக்கப்பட்டது. மீண்டும் சட்டமன்ற மேல வை உருவாக்க வேண்டும் என திமுக 1989, 1996ம் ஆண்டுகளில் முயன்றது. ஆனால் அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதுமான ஆதரவு கிடைக்காததால் அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. தற்போது 2006-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12-04-2010ல் தமிழக சட்ட மன்றத்தில் மேலவையை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை சட்டம் 2010ல் உருவாக்கப்பட்டு 4-05-2010 அன்று மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் அடிப்படை யில் மேலவை உருவாக்குவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள்
தொகுதிகள் எண்ணிக்கை - 78
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(௯ சட்டமன்ற உறுப்பினருக்கு ஒருவர் )
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(சிற்றூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது)பட்டதாரி தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆசிரியர் தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆளுநரால் நியமனம் - 12

சட்டமன்ற உறுப்பினர்களாலும், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 52, ஆளுநரால் நியமனம் செய்யப்படக் கூடிய வர்களின் எண்ணிக்கை 12, மீதம் உள்ள 14 பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதியாகும். இந்த தொகுதியில் வாக்காளர்களை சேர்ப்பதும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதும், வாக்குப் பதிவு கண்காணிப்பதும் இன்றைய பணிகளாகும்.

தொகுதிகள் 
தமிழ்நாட்டில் 7 பட்டதாரிகள் தொகுதிகளும், 7 ஆசிரியர்கள் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான தகுதி :-

* சென்னை மாநகராட்சி பகுதிகளில் மண்டல மேலாளர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக (designated officer ) செயல்படுவர். இவர்களிடம் விண்ணப் பம் கொடுக்கப்பட வேண்டும்.
* பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயரை சேர்க்க வேண்டும் எனில் அவர் 1-11-2010 தேதியில் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். தகுதி என்பது அவர் 1-11-2007 க்கு முன்னர் பட் டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண் டும். ஒருவர் 10+2+3 அல்லது 11+1+3 ஆண்டுகள் படித்து பட்டம் அல்லது பட்ட யம் பெற்றிருக்க வேண்டும்.
.* விண்ணப்பத்துடன் (படிவம் 18) பட்டம் அல்லது பட்டயம் நகல் விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு ஆஜர்படுத்த வேண் டும். விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள ஒரு நபரோ நேரில் வாக்காளர் பதிவு அதிகாரியிடத்தில் ஆய்விற்கு கொடுக்க வேண்டும். ஆய்வின்போது அசல் பட்டம் அல்லது பட்டயச் சான்றிதழை சரிபார்க்க ஆஜர்படுத்த வேண்டும்.
* பட்டம் அல்லது பட்டயம் அசல் இல்லாதவர்கள் அரசு ஆவணம் ஏதாவது ஒன்றில் அவர் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர் என்று பதிவு பெற்றிருப்பின் அதனை ஆஜர்படுத்தலாம்.
* வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் பட்டியலில் பதிவு பெற்றதற்கான
சான்றாவணங்கள்
* பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் விண்ணப்பதாரரின் ஆணையுறுதி ஆவணம்ஆசிரியர் - தொகுதி வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான

* அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக 1-11-2010 முன்னதாக ஆறு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
* ஆசிரியர் தொகுதிக்கென உள்ள படிவம் 19ல் விண்ணப்பிக்க வேண்டும்.* கல்லூரி-பள்ளியில் பணி புரிந்ததற்கான சான்றினை சம்பந்தப்பட்ட முதல்வரிட மிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் காலத்தில் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் போதுமானது.
* கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தனித்தனியாக பெற்று சான் றுகளுடன் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஆய்விற்கு ஒப்படைக்கலாம்.இருப்பிடச் சான்றிதழ் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் விண் ணப்பதாரர் தற்போது வசிக்கும் முகவரிக்கான கீழ்க்கண்ட சான்றில் ஒன்றினை ஆய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
* வங்கி-அஞ்சல் நடப்பு கணக்குப் பதிவேடு நகல்,
* குடும்ப அட்டை அல்லது கடவுச் சீட்டு, ஒட்டுநர் உரிமம் நகல்,
* விண்ணப்பதாரர் அல்லது அவரின் பெற றோர் பெயரில் உள்ள வீட்டு வரி விதிப்பு அல்லது குடிநீர், தொலைபேசி, மின்சாரம். சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆவ ணங்கள்.
* விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அஞ்சல் துறை மூலம் பெறப்பட்ட கடிதங்களின் உறைகள்.

விதிமுறைகள்
* ஒருவர் ஆசிரியராக இருப்பின் அவர் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பங்கள் 1-10-2010 முதல் 6-11-2010 
* சிறப்பு முகாம்கள் செயல்படும் நாள் 16-10-2010,17-10-2010, மற்றும் 30-10-2010,   31-10-2010 இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பெறுவதற்கென தனி முகாம்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அமைக்கப்படும்.
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் மேற்கண்ட கால அவகாசத்தில் பெயர்களை பதிவு செய்வது சரி.
* விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்பினால் அவை விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர் 9-11-2010 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தனது ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அவர் ஆய்விற்குபிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு பரிந்துரை செய்வார்.
குறிப்புகள்
* ஆசிரியர்கள் இரண்டு வாக்குரிமை கொண்டவர்கள். அவர்கள் பட்டதாரி தொகுதிக்கும் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கும் வாக்களிக்க லாம். எனவே அவர்கள் படிவம் 18 மற்றும் படிவம் 19 இரண்டிலும் தங்களது விண்ணப் பத்தினை அளித்திட வேண்டும்.
* ஆசிரியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்து படிவங் களை பெற்று விண்ணப்பித்தால் காலவிர யத்தை தவிர்க்கலாம்.
* பள்ளிப் படிப்பு முடித்து ( 10 ஆண்டுகள் ) மேலும் 5 ஆண்டுகள் படித்து பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்.
* வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில், மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம்.சட்டமன்ற தேர்தல்களில் சமீபகாலமாக வாக்குகளை விலை பேசும் போக்கு காணப் படுகையில், படித்து பட்டம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Thursday, October 14, 2010

திருப்பூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஒரு நபர் குழு அறிக்கை ஏமாற்றம்

அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி 
குறைகளை களைய வலியுறுத்தி
பணி நீக்கம் செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 26.10.2010 அன்று மாலை
 6-00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Saturday, October 09, 2010

A.I.S.G.E.F. பொன்விழா.

மாநில அரசு ஊழியர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 1960-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் ஜனவரி 23,24-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திர மாநில என்.ஜி.ஓ. யூனியனின் பெருமைமிகு தலைவர் ஸ்ரீ இராமுலுவின் சீரிய முயற்சியால் துவக்கப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்துள்ளன. சுமார் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக சம்மேளனம் விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநில இணைப்பு அமைப்புகளின் பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.

சம்மேளனத்தின் சாதனை

கடந்த 50 ஆண்டுகாலமாக, சம்மேளனத்தின் இடைவிடாத செயல்பாட்டின் காரணமாக பெரும்பான்மையான மாநிலங்களில் இன்று மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தர முடிந்துள்ளது. 1980க்குப் பிறகு மத்திய அரசில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்த தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடைபெற்றுள்ள 14 அகில இந்திய வேலை நிறுத்தங்களில், சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்று முத்திரை பதித்துள்ளனர். சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று 10.02.1988 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தமே, தமிழகத்தில் 1988ல் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் (ஜாக்டீ) போராட்டத்திற்கு வித்திட்டது. இந்த போராட்டமே தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சட்டமாக்கிட முயலும் புதிய பென்சன் திட்டத்தை இதுவரை தடுத்து நிறுத்திட முடிந்துள்ளது என்றால், அதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பங்கு மகத்தானது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்பு, எல்.ஐ.சி., வங்கி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும்,வேலை நிறுத்த உரிமையை அடிப்படை உரிமையாக்கிட வலியுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் குறிப்பிடும்படியான பாத்திரத்தை சம்மேளனம் வகித்து வருகிறது. வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக்கத்தில் ஏனைய வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நமது சம்மேளனம் பணியாற்றியுள்ளது.

போராட்டக் களத்தில் ஆதரவு

தமிழ்நாட்டில் 2003ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட நாடு முழுவதும் நிதி திரட்டி தமிழக அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாத்தது அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம். இன்றும் காஷ்மீர் மற்றும் பீகாரில் போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்து, நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவினை திரட்டி வருகிறது சம்மேளனம்.

இந்த காலகட்டத்தில் அகில இந்திய சம் மேளனம்,பெண்களை அணிதிரட்டி,அவர்களை பயிற்றுவித்து தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தவும் தவறவில்லை. சம்மேளனத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மாநில அமைப்பும் அம்மாநிலத்தில் பெண்களுக்கென்று ஒரு துணை அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த துணை அமைப்பின் பொறுப்பாளர்களை தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெண்களுக்கான அமைப்பு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். இதன் மூலம் பெண்களை தேசிய தலைவர்களாக அடையாளம் காட்ட முடிந்துள்ளது.

தமிழகத்தின் பங்கு

தோழர் எம்.ஆர்.அப்பன் சம்மேளனம் உருவான 1960-ம் ஆண்டிலிருந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு வந்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தோடு இணைந்து செயலாற்றிட வலியுறுத்தி வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சம்மேளனக் கூட்டங்களில் எம்.ஆர்.அப்பன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கைக் குழு உருவாகி செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிக்கக் கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர் (1984) மும்பையில் 1985ல் நடைபெற்ற சம்மேளனத்தின் 6-வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் அகில இந்தியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 7வது தேசிய மாநாடு 1990, மே மாதம் 12 முதல் 15 தேதிகளில் கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்து (1984) குறுகிய காலத்தில் அகில இந்திய மாநாட்டை நடத்திட முன்வந்தது, அனைத்து மாநில பிரதிநிதிகளின் பாராட்டை பெறத்தக்கதாக அமைந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற 9வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் சம்மேளனத்தின் கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த கே.கங்காதரன் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக சம்மேளனத்தின் 11வது தேசிய மாநாடு 2002 டிசம்பர் மாதம் 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மும்பையில் 2005-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 12-வது தேசிய மாநாட்டில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் துணைப் பொதுச் செயலாளராகவும், இன்றைய மாநிலத் தலைவராக உள்ள இரா.தமிழ்ச் செல்வி, அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 13-வது தேசிய மாநாட்டில் ஆர்.ஜி.கார்னிக் அகில இந்திய தலைவராகவும், சுகுமால்சென் மூத்த துணைத்தலைவராகவும், அஜய் முகோபாத்யாயா கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சம்மேளனத்தின் அகில இந்திய பொருளாளராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் தலைமையிடத்து செயலாளராகவும், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.பீட்டர் பர்னபாஸ் மற்றும் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர் களாகவும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பி.மல்லிகா பத்மினி தேசிய செயற்குழுவில் தமிழகத்தின் சார்பில் மகளிர் பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5, 6, 7 தேதிகளில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்றது.

தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சத்துணவு ஊழியர்களை உடனடியாக பணியில் அமர்த்தவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசுஊழியர் சம்மேளனத்தின் தேசிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  தமிழக அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது . தேசிய குழு கூட்டத்தினை ஆந்திரா மாநில முதல்வர் திரு ரோசயா அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றினார். விஜயவாட நாடளுமன்ற உறுப்பினர் திரு லகடபதி ராஜகோபால் வரவேற்ப்புரையாற்றினார். நாடு முழுவதுமிருந்து 1100மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கடந்த 44 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் பீகார் மாநில அரசுஊழியர்களின் தலைவர்களை அழைத்து பேசி சுமூக முடிவினை எட்ட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்த உரிமையை சட்ட பூர்வமாக வழங்கிட வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என் வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 18 அன்று அகில இந்திய கண்டன நாள் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.