திருப்பூர் டிச.3-
புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து
செய்துபழைய ஓய்வூதிய சட்டத்தை அமல்படுத்தவும், வரும்
ஜனவரி
22-ம்தேதி
ஒட்டு
மொத்த
சிறு
விடுப்பு போராட்டத்தின் நோக்கங்களையும் வலியுறுத்தி திருப்பூரில் புதனன்று அரசு ஊழியர்கள் பேரணி
நடத்தினர்.
அரசுப்
பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மத்திய
அரசு
ஊழியருக்கு இணையாக,
மாநில
அரசு
ஊழியருக்கும் சதவிகித அடிப்படையில் வீட்டுவாடகைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் கல்விப்படி உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்கிட வேண்டும். 7வது
ஊதிய
மாற்றத்திற்குப் பின்பும் நீடித்திருக்கிற ஊதிய
முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை சரி
செய்ய
வேண்டும். பணி
நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்பின் படி
மாற்று
பணி
வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி
நிரந்தரம் செய்ய
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு
ஊழியர்
சங்கத்தின் சார்பில் புதனன்று கோரிக்கை பேரணி நடைபெற்றது
திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு
ஊழியர்
ஊர்வலம் தொடங்கியது.
அரசு ஊழியர்
சங்க
மாவட்டத் தலைவர்
செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வருவாய்த் துறை
அலுவலர் சங்கத்தின் பொதுச்
செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார்.
இதில் பெண்
ஊழியர்கள் உள்பட
ஏராளமானோர் கலந்து
கொண்டனர். இந்த
ஊர்வலம் ஆர்.வி.இ. லே
அவுட்,
செரீப்
காலனி,
தாராபுரம் சாலை,
கே.எஸ்.சி.பள்ளி
சாலை
வழியாக
அரிசிக்கடை வீதியை
அடைந்தது.
அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார்.