திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, January 10, 2011

மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின் போராட்ட நடவடிக்கைகள்

2011 ஜனவரி 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின்படி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில்,

ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களையக் கூடிய வகையில் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.


மத்திய அரசுக்கிணையாக அனைத்துப் படிகளையும் வழங்கிட வேண்டும்.


அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும்.


தரப்படுத்தப்படாத ஊதிய விகிதங்களின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், பேரூராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராமப் புற நூலகர்கள், தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய ஏற்ற முறையுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்கிட வேண்டும்.


ஒப்பந்த நியமனம், தற்காலிக நியமனம் மற்றும் தனியார் மூலம் அரசுப் பணிகளை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து 01.04.2003-க்கு முன்பிருந்தது போலவேஅரசு ஊழியர்-ஆசிரியர்கள் அனைவருக்கும் பென்சன், குடும்ப பென்சன், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை வழங்குதல் தொடர வேண்டும்.


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் நடத்துவதைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது இந்திய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி அதற்குண்டான ஊதியத்தை வழங்க வேண்டும்.


அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அடக்குமுறையின் மூலமாக ஒடுக்குவதை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வு காண வேண்டும்.

போன்ற பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,

22.01.2011 அன்று திருப்பூர் நகரில் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்துவது
02.02.2011 அன்று திருப்பூர் நகரில் மறியலில் ஈடுபடுவது
10.02.2011 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது 
என முடிவாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                  (து.  இராஜகோபாலன்)                                     (செ. நடராஜன்)
                     மாவட்டத் தலைவர்                                மாவட்டச் செயலாளர்