திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Thursday, January 27, 2011

02.02.2011 - மறியல் போராட்டம் - பிரச்சார இயக்கம்

02.02.2011 அன்று மறியல் போராட்டத்திற்கு திரளான ஊழியர்களைத் திரட்டிட மாவட்ட நிர்வாகிகள் வட்டக் கிளைகளுக்கு பிரச்சாரம் செய்ய கீழ்க்கண்ட அட்டவணைப்படி செல்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1)    திருப்பூர்                31.01.2011 திங்கள்            ஆர், பாஸ்கரன்,  மாவட்ட இணைச் செயலாளர்
                                                                                                 பி. விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர்

                                              01.02.2011 செவ்வாய்   அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்

2)    பல்லடம்              28.01.2011 வெள்ளி       
ஆ. அம்சராஜ், மாவட்டப் பொருளாளர்
                                             31.01.2011 திங்கள்          எஸ். முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர்
                                                                                              செ. நடராஜன், மாவட்ட செயலாளர்           

3)    அவிநாசி             27.01.2011 வியாழன்  
ஆர், பாஸ்கரன், மாவட்ட இணைச் செயலாளர்

                                            28.01.2011 வெள்ளி         பி. விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர்
                                                                                             செ. நடராஜன், மாவட்டச் செயலாளர்

4)    தாராபுரம்           28.01.2011 வெள்ளி    
து. இராஜகோபாலன், மாவட்டத் தலைவர்

                                           31.01.2011 திங்கள்         ஆ. மணியன், மாவட்டத் துணைத் தலைவர்
                                                                                             எஸ்.முருகசாமி, மாவட்ட இணைச் செயலாளர்

5)    காங்கயம்             27.01.2011 வியாழன்   து. இராஜகோபாலன், மாவட்டத் தலைவர்
                                                                                            
ஜி. விஜயன். மாவட்டத் துணைத் தலைவர்

                                                                                              க. ஆறுமுகவள்ளல்,  மாவட்டத் துணைத் தலைவர்

6)    உடுமலைப்-      
27.01.2011 வியாழன்  ஆர். ஜெனோவா, மாவட்ட இணைச் செயலாளர்

        பேட்டை               28.01.2011 வெள்ளி      எம். பாலசுப்பிரமணியன்,  மாநில செயற்குழு உறுப்பினர்
                                             31.01.2011 திங்கள்        ஆ. அம்சராஜ், மாவட்டப் பொருளாளர்
                                                                                                     
Saturday, January 22, 2011

போராட்ட ஆயத்த மாநாடு

ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின்படி ஊதிய மாற்றத்திலுள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் அனைத்து சங்கங்களையும் உடனடியாக அழைத்துப் பேசுதல் உள்ளிட்ட பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 22.01.2011 சனிக்கிழமையன்று திருப்பூரில் மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமையில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் தோழர் செ. நடராஜன் வரவேற்புரையாற்றினார்.  தொலை தொடர்பு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகி தோழர் செல்லத்துரை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் அ.நிசார் அகமது ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் தோழர்  P.S. அப்பர் அவர்கள் கோரிக்கைகளை விளக்கி எழுச்சியுரையாற்றினார். இ;மாநாட்டில் மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் உட்பட 59 ஆண்களும், 114 பெண்களுமாக 173 ஊழியர்கள் பங்கேற்றனர்.  இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் ஆ.அம்சராஜ் நன்றி கூறினார்.

Friday, January 21, 2011

22.01.2011 - போராட்ட ஆயத்த மாநாடு

ஊதிய மாற்றத்திலுள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் அனைத்து சங்கங்களையும் உடனடியாக அழைத்துப் பேசுதல் உள்ளிட்ட நிலுவைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி

போராட்ட ஆயத்த மாநாடு

நாள்:- 22.01.2011 சனி காலை 10-00 மணி
இடம்:- K.R.C.. சிட்டி செண்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர்.
எழுச்சியுரை:- தோழர்  P.S. அப்பர், மாநிலத் துணைத் தலைவர், T.N.G.E.A.

அரசு ஊழியர்களே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க 
அணி திரள்வோம்!  போhரட்டத்தை வெற்றிகரமாக்குவோம்!!

மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
திருப்பூர் மாவட்டம்.

Wednesday, January 19, 2011

மாநிலபிரதிநிதித்துவப் பேரவை முடிவுகள்

2011 [dthp  8 kw;Wk; 9-Mk; Njjpfspy; jpUney;Ntypapy; eilngw;w khepyg; gpujpepjpj;Jtg; Nguit KbTfspd;gb

ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களையக் கூடிய வகையில் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

 மத்திய அரசுக்கிணையாக அனைத்துப் படிகளையும் வழங்கிட வேண்டும்.

 அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும்.

 தரப்படுத்தப்படாத ஊதிய விகிதங்களின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், பேரூராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராமப் புற நூலகர்கள், தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய ஏற்ற முறையுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்கிட வேண்டும்.

 ஒப்பந்த நியமனம், தற்காலிக நியமனம் மற்றும் தனியார் மூலம் அரசுப் பணிகளை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து 01.04.2003-க்கு முன்பிருந்தது போலவேஅரசு ஊழியர்-ஆசிரியர்கள் அனைவருக்கும் பென்சன், குடும்ப பென்சன், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை வழங்குதல் தொடர வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் நடத்துவதைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது இந்திய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அடக்குமுறையின் மூலமாக ஒடுக்குவதை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வு காண வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும்

சாலைப் பணியாளர்களின் பணிநீக்க காலமான 41 மாத காலத்தை வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

போன்ற பத்தொன்பது அம்சக்  கோரிக்கைகளை வலியுறுத்தி  
22.01.2011 அன்று  நடைபெறும்  போராட்ட ஆயத்த மாநாட்டிலும் 
02.02.2011 அன்று  நடைபெறும் மறியல் போராட்டத்திலும் 
10.02.2011 அன்று நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும்

திரளாகப் பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,
திருப்பூர் மாவட்டம்.

Wednesday, January 12, 2011

விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம்

சுற்றறிக்கை எண்.02/2011/மா.செ.குழு                                                         நாள் 12.01.2011

நாள்:- 13.01.2011   வியாழக்கிழமை                                      நேரம்:-மாலை 06-00 மணி

பொருட்கள்:-

1)    கடந்த கால நடவடிக்கைகள் ஆய்வு
2)    உறுப்பினர் சந்தா 2011
3)    அரசு ஊழியர் பத்திரிக்கை சந்தா
4)     எம்ளாயீஸ் பாரம் பத்திரிக்கை சந்தா
5)    மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்ட முடிவுகள்
6)    நிதி
7)    மாவட்ட மகளிர் துணைக் குழு அமைத்தல்
8)    இதர பிரச்சனைகள்

                                                                                       தங்கள் அன்புள்ள,

                                                                                         (செ.நடராஜன்)
பெறுநர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
வட்டக் கிளை நிர்வாகிகள்
மாவட்ட நிர்வாகிகள்

Monday, January 10, 2011

மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின் போராட்ட நடவடிக்கைகள்

2011 ஜனவரி 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின்படி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில்,

ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களையக் கூடிய வகையில் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசுக்கிணையாக அனைத்துப் படிகளையும் வழங்கிட வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும்.

தரப்படுத்தப்படாத ஊதிய விகிதங்களின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், பேரூராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராமப் புற நூலகர்கள், தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தரப்படுத்தப்பட்ட ஊதிய ஏற்ற முறையுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் வழங்கிட வேண்டும்.

ஒப்பந்த நியமனம், தற்காலிக நியமனம் மற்றும் தனியார் மூலம் அரசுப் பணிகளை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து 01.04.2003-க்கு முன்பிருந்தது போலவேஅரசு ஊழியர்-ஆசிரியர்கள் அனைவருக்கும் பென்சன், குடும்ப பென்சன், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றை வழங்குதல் தொடர வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் நடத்துவதைக் கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது இந்திய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி அதற்குண்டான ஊதியத்தை வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அடக்குமுறையின் மூலமாக ஒடுக்குவதை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்வு காண வேண்டும்.

போன்ற பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,

22.01.2011 அன்று திருப்பூர் நகரில் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்துவது
02.02.2011 அன்று திருப்பூர் நகரில் மறியலில் ஈடுபடுவது
10.02.2011 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது 
என முடிவாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                  (து.  இராஜகோபாலன்)                                     (செ. நடராஜன்)
                     மாவட்டத் தலைவர்                                மாவட்டச் செயலாளர்