30.08.2010 அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஊழியர்களில் 19 தோழர்களை நிரந்தரப் பணி நீக்கமும்,7 தோழர்களை தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ள தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சத்துணவு ஊழியர்களை மீளப் பணியமர்த்த வலியுறுத்தியும், அச்சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின் படி பேரணி நடத்த காவல் துறையின் அனுமதி கிடைக்காததால் 22.09.2010 புதன் மாலை 6-00 மணிக்கு திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 53 ஆண்கள் 157 பெண்கள் ஆக மொத்தம் 210 நபர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை :- திரு து. இராஜகோபாலன்,
மாவட்டத் தலைவர்
கோரிக்கை விளக்கவுரை:- திரு செ. நடராஜன்,
மாவட்டச் செயலாளர் (பொறுப்பு)
வாழ்த்துரை:-
திரு எஸ்.முருகேசன்,மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.
திரு எஸ். சௌந்திரபாண்டியன்,
BSNL ஊழியர் சங்கம்
நன்றியுரை:- திரு ஜி. விஜயன்
மாவட்டத் துணைத் தலைவர்
வாழ்த்துரை:-
திரு எஸ்.முருகேசன்,மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.
திரு எஸ். சௌந்திரபாண்டியன்,
BSNL ஊழியர் சங்கம்
நிறைவுரை:- திரு சு. சிவக்குமார்
மாநிலத் துணைத் தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
நன்றியுரை:- திரு ஜி. விஜயன்
மாவட்டத் துணைத் தலைவர்