திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Wednesday, December 03, 2014

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக அரசு ஊழியர்கள் கோரிக்கை பேரணி



திருப்பூர் டிச.3-

புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்துபழைய ஓய்வூதிய சட்டத்தை அமல்படுத்தவும், வரும் ஜனவரி 22-ம்தேதி ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தின் நோக்கங்களையும் வலியுறுத்தி திருப்பூரில் புதனன்று அரசு ஊழியர்கள் பேரணி நடத்தினர்.  

அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மத்திய அரசு ஊழியருக்கு இணையாக, மாநில அரசு ஊழியருக்கும் சதவிகித அடிப்படையில் வீட்டுவாடகைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் கல்விப்படி உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்கிட வேண்டும். 7வது ஊதிய மாற்றத்திற்குப் பின்பும் நீடித்திருக்கிற ஊதிய முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்பின் படி மாற்று பணி வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதனன்று கோரிக்கை பேரணி நடைபெற்றது

திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு ஊழியர் ஊர்வலம் தொடங்கியது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத்  தலைமை வகித்தார்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் .அம்சராஜ் உரையாற்றினார்

இதில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ஆர்.வி.. லே அவுட், செரீப் காலனி, தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி சாலை வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது

அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார்.
நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.Bottom of Form

Sunday, September 14, 2014

ஒரு லட்சம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அக்.10 ல் முதல்வரை சந்திக்கும் இயக்கம்

சென்னை, செப்.14-சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல மைச்சரை சந்திக்க லட்சம் பேர் சென்னையில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட் டமைப்பு கூட்டம் 13ம் தேதி சென்னையில் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் கே. பழனிச்சாமி தலைமையில் நடை பெற்றது.
கூட்டத்தில் மாநில இணை அமைப்பாளர்கள் சே.க.விஜய பாண்டியன், மு.வரதரா ஜன், எஸ்.இராசேந்திரன், கே.தமிழ ரசி மற்றும் நிர்வாகக்குழு உறுப் பினர்கள் டி.ஆர்.மேகநாதன், ஏசய்யா குருபாதம், டி.டெய்சி, எம்.பரிமளா, பி.சுந்தரம்பாள், எஸ். சொர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டமைப்பு முன்னதாக எடுத்த முடிவின்படி வரும் 19ம் தேதியன்று தமிழக முதல்வரைச் சந்திக்க திட்டமிட்டு இருந்தோம். மேற்கண்ட தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் காலமாக இருப்பதா லும், தேர்தல் நடக்கும் இடங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாலும் சந்திப்பு இயக் கத்தை அக்டோபர் 10ம் தேதியன்று சென்னையில் நடத்திட முடிவு செய் யப்பட்டுள்ளது.
தனித்துறை, பணிவிதிகள் ஏற்ப டுத்தி பணிவரன்முறை செய்தல், முழுநேர பணி நிரந்தரம் செய்து கல்வித்தகுதி அடிப்படையில் மாத ஊதியம், மிஷன்மோடு என்ற பெய ரில் அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு விடக்கூடாது. அரசு ஓய்வூதிய விதிப்படி அக விலைப் படியுடன் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற அரசின் மிரட்டல் மற் றும் அடக்குமுறைகளையும் மீறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் திரள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, September 01, 2014

முன்னேற்றம் யாருக்கு?



Top of Form

மத்திய அரசின் முடிவுகளால் நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரமாக அவர் கூறியுள்ள  ஆதாரங்கள் என்னவென்றால் அன்றைய நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பன்னாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்துவது தான் பொருளாதார நிலையில் முன்னேற்றம் என்பதற்கான  பொருள். மேலும் முக்கியத் துறைகளை அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட இருப்பதாகவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நாட்டிற்கு பெருமையையும், வருமானத்தையும் ஈட்டித்தரும் காப்பீட்டுத் துறையை அந்நியருக்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை. மேலும் உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேத் துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்குத் தர இவர்கள் திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துள்ளதோடு ஊழல் புகார் காரணமாக சில ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது தடை செய்யப்பட் டிருப்பதையும் விலக்கிக் கொள்ள இருப்பதாக அருண்ஜெட்லி கூறியுள்ளதிலிருந்து ஊழலை ஒழிக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பு இவர்கள் முழங்கியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தை என்பதை புரிந்து கொள்ள முடியும். மோடி அரசு பொறுப்பேற்று செப்டம்பர் 2-ம் தேதி யுடன் நூறு நாட்கள் முடிவடைய உள்ளது.
இந்த நூறு நாட்கள் என்பது அந்நிய முதலாளிகளுக்கு ஆதாயத்தை பெருக்குவதாகவும், நாட்டின் பெரும் பகுதி மக்களின் துன்ப துயரங்களை அதிகரிக்கச் செய்வதுமாகவே இருந்து வந்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மறுபுறத்தில் விவசாய உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதையெல்லாம் சீர்செய்ய மோடி  அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மாறாக இந்திய முதலாளிகளை அழைத்துக்  கொண்டு ஜப்பான் சென்றிருக்கிறார் மோடி. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் செல்ல இருக்கிறார்.
இந்த பயணங்கள் இந்திய முதலாளிகள் லாப வேட்டைக்கு உதவுமே அன்றி எளிய மக்களுக்கு கிடைக்கப் போவது எதுவுமே இல்லை. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டிலேயே இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பட்டினிச் சாவுகளை தடுக்கப் பயன் படும் இந்தத் திட்டத்தை பட்டினி போட்டு சாகடிக்க வேண்டும் என்பதுதான் மத்திய ஆட்சியாளர்களின் நோக்கம். மொத்தத்தில் மோடி நடத்துவது முதலாளிகளின் ஆட்சி. இது அடிப்படையில் மக்களுக்கு எதிரான ஆட்சி.

எல்.ஐ.சி. சொத்து மதிப்பு ரூ.17.69 லட்சம் கோடி! மோசடி செய்ய துடிக்கும் மோடி அரசு! ஆர்.ராஜேந்திரன், சென்னை



1956ல் ரூ.5கோடி மூலதனத்தில், 245 தனியார், அந்நிய இன்சூரன்ஸ் கம்பெனிகளின் முறைகேடுகள் காரணமாக, தேச உடமையாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும். 31.03.2014ல் ரூ.17.69 லட்சம் கோடி அளவிற்கு மக்களின் சேமிப்பை திரட்டியுள்ளது. (இந்த வருட மத்திய அரசின் வரவு-செலவு ரூ.17 லட்சம் கோடிதான்) மேலும், நமது நாட்டில் ஊழல் அற்ற ஒரு மிகப்பெரிய நிதித்துறை நிறுவனமாகவும் உள்ளது. மத்திய அரசின் வருடாந்திர கடன் தேவையில் 25 சதவீதம் - கால் பங்குஅளவை எல்.ஐ.சி.யே வழங்குகிற அளவிற்கு மக்களின் காமதேனுவாக செயல்படுகிறது. 1956ல் ரூ.5 கோடி மற்றும் 2011ல் ரூ.95 கோடி கொடுத்து, மொத்தம் ரூ.100 கோடி மூலதனத்தில் செயல்படும் எல்.ஐ.சி. டிவிடெண்டாக மட்டும் சுமார் ரூ. 15,000 கோடியை 31.03.2014 வரை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளது. இதுபோல பல மடங்கு வருமான வரியாகவும், நிறுவன வரியாகவும், சேவை வரியாகவும் மத்திய அரசிற்கு வழங்கும் மாபெரும் நிதித்துறை நிறுவனமாகும்.
2013 - 2014 -ல் சாதனை
1) 2048 கிளைகளை கொண்ட, 1,20,388 ஊழியர்கள், 12 லட்சம் முகவர்களை கொண்ட ஆயுள் காப்பீடு நிறுவனமாகும். கடந்த ஆண்டு புது வணிகமாக 3.45 கோடி புதிய பாலிசிகளையும், ரூ.90,123/- கோடி முதல் வருட பிரீமியம் ஆகவும் வணிகம் செய்துள்ளது. 23 தனியார், அந்நிய கம்பெனிகளின் போட்டிகளுக்கிடையே, 84 சதவீதம் பாலிசி அடிப்படையிலும், 75 சதவீதம் பிரீமியம் அடிப்படையிலும் இன்சூரன்ஸ் சந்தையை தக்க வைத்துள்ள மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நிறுவனமாகும். எல்.ஐ.சி. க்கு அடுத்து 2வது ஆக உள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிறுவனம் 4 சதவீதம் சந்தையைதான் வைத்துள்ளது.2) 2.59 கோடி பாலிசிதாரர்களுக்கு ரூ.91,186 கோடி முதிர்வு தொகையை கடந்த ஆண்டு மட்டும் வழங்கியுள்ளது. 99.68 சதம் முதிர்வு தொகையையும், 99.3 சதம் இறப்புக்கான காப்பீட்டு தொகைகளையும் வழங்கியுள்ள, உலக சாதனை படைத்துள்ள, ஒரே நிறுவனம் ஆகும். இதில் 72 சதம் மக்களின் வங்கி கணக்கிலேயே வழங்கப்படுகிறது.
3) 30 கோடி தனி நபர் ஆயுள் காப்பீடு பாலிசிகள், 11.5 கோடி குழு காப்பீடு பாலிசிகள் என 41.50 கோடி பாலிசிதாரர்களின் ஆயுளுக்கு பொருளாதார உத்தரவாதம் வழங்கியுள்ள உலகின் மிகப்பெரிய உயிர் காக்கும் நிறுவன மாக சாதனை படைத்துள்ளது எல்.ஐ.சி. என்ற மூன்று எழுத்து ஆகும். 41 கோடி என்ற எண்களை தாண்டியுள்ள, மக்கள் சீனத்தை தவிர, உலகில் வேறு நாடுகளே கிடையாது எனலாம்.4) 31.3.2014 முடிந்த கடந்த வருடத்தில் மட்டும் எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம் ரூ.3,80,042/- கோடியாகும். இது மத்திய பட் ஜெட்டின் 25 சதவீதமாகும் எனலாம். கடந்த ஆண்டின் மொத்த பிரீமிய வருமானம் மட் டும் ரூ.2,36,798/- கோடியாகும். மக்களின் சேமிப்புக்கு ஏற்ற காப்பகமாக உள்ள ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும்.5) 31.03.2014 வரை மத்திய, மாநில அரசுகளிடம் செய்த முதலீடு ரூ.8,71,497/- கோடியாகும். வீட்டு வசதிக்காக, மின்சாரம், குடிநீர், பாசனம், சாலை, தகவல் தொடர்பு வசதிக்காக என உள்கட்டமைப்பு தேவைக்காக செய்த முதலீடு ரூ.1,98,272/- கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ.10,69,769/- கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் வருடத்திற்கு ரூ.60,000/- கோடி அளவிற்கு முதலீடு செய்து வரும், பங்குச் சந்தைக்கு ஆபத்து வரும்போதெல்லாம், மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப பங்குச் சந்தைக்கும் முதலீடு செய்து ஆபத்திலிருந்து அந்நிறுவனத்தையும் காப்பாற்றி வந்துள்ளது எல்.ஐ.சி. இவ்வாறு பங்குச்சந்தைக்கும் மறை முகமாக, இலவசமாக ஆயுள் காப்பீடு செய்து வரும் இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும்.
ஐந்தாண்டு திட்டங்களுக்கு
எல்.ஐ.சி.2வது ஐந்தாண்டு திட்டத்தில் (1956 - 1961)ரூ.184 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.3வது ஐந்தாண்டு திட்டத்தில் (1961 - 1966) ரூ.285 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.4வது ஐந்தாண்டு திட்டத்தில் (1969 - 1974) ரூ.1,530 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.5வது ஐந்தாண்டு திட்டத்தில் (1974 - 1979) ரூ.2,942 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.6வது ஐந்தாண்டு திட்டத்தில் (1980 - 1985) ரூ.7,140 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.7வது ஐந்தாண்டு திட்டத்தில் (1985 - 1990) ரூ.12,969 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.8வது ஐந்தாண்டு திட்டத்தில் (1992 - 1997) ரூ.56,097 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.9வது ஐந்தாண்டு திட்டத்தில் (1997 - 2002) ரூ.1,70,929 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.10வது ஐந்தாண்டு திட்டத்தில் (2002 - 2007) ரூ.3,94,779 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007 - 2012) ரூ.7,04,151 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012 - 2014) ரூ.4,51,460 கோடி முதலீடு (முதல் இரண்டு வருடம் மட்டும்) செய்துள்ளது எல்.ஐ.சி.. இவ்வாறு மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாபெரும் உதவி செய்யும் எல்.ஐ.சி. நிறுவனத்தை மத்திய அரசே சீரழிக்க அனுமதிக்கலாமா?
7) சிறப்பான பாலிசிதாரர் சேவை, ஊழலற்ற நிறுவனம், ஏழை, எளிய மக்க ளுக்கு ஆயுள் காப்பீடு என தனியார், அந்நிய பகாசுர கம்பெனிகளுடன் போட்டி போட்டு இந்திய அளவில் 31 பரிசுகளையும் வாங்கியுள்ள ஒரே காப்பீட்டு நிறு வனமாகும் எல்.ஐ.சி. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் மிகவும் அதிகம் நம்பிக்கையுள்ள முதல் தரமான நிறுவனமாக எல்.ஐ.சி. உள்ளது (சூடி 1 ஆடிளவ கூசரளவநன ஐனேயைn க்ஷசயனே) என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இந்த முதல் இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்தும் வருகிறது. இப்படிப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை சீரழிக்க நினைக்கும் பா.ஜ.க. மோடி அரசை கண்டிப்போம். இந்த தவறை மோடி அரசு திருத்திக் கொள்ளுமா? மக்கள் சக்தியால் இநத் தவறை திருத்த முடியும். மக்களை திரட்டிடுவோம்.
8) எல்.ஐ.சி.யின் சமூகக் கடமை : ஆம் ஆத்மி யோஜனா எனும் திட்டத்தை உடல் உழைப்பு ஏழை தொழிலாளிக்கு வழங்கி தன்னுடைய நிறுவன சமுதாய கடமையை சிறப்பாக செய்து வருகிறது எல்.ஐ.சி. 18 முதல் 59 வயது வரையில் உள்ளவர்களுக்கு இயற்கை மரணத்திற்கு ரூ.30,000/-, விபத்து மரணத்திற்கு ரூ.75,000/-, படிக்கும் குழந்தைகளுக்கு (9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) கல்வி உதவியாக ரூ.600 வருடத்திற்கு 2 முறை வழங்கி வரும் திட்டத்திற்கு ஆகும் பிரீமியம் ரூ.200/-. இதில் ரூ.100/- ஐ மானியமாக எல்.ஐ.சி. யே வழங்குகிறது.இவ்வாறு சிறப்பாக செயல்படும் நிறுவனத்தை சீரழிக்க அந்நிய முத லீட்டை 49 சதவீதம் உயர்வு என்ற சீரழிவு மசோதாவை, தேச விரோத மசோதா என்று சொன்னால் தவாறாகாது என சொல்ல தோன்றுகிறது. இது ஒரு பொருளாதார பயங்கரவாத செயல்என சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பொருளாதார பயங்கரவாத செயலை அந்நிய முதலீடு என்று சொல்லி அனுமதிக்க வேண்டாம் என மக்கள் கேட்கிறார்கள்.
இந்த அந்நிய முதலீடுஉயர்வை எதிர்ப்பவர்களின் செயல் ஒரு தேசபக்த செயலாகும். இந்த தேச பக்த செயலை எல்.ஐ.சி. ஊழியர்கள், இடது சாரிகள், அறிவு ஜீவிகள் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சக்திகள், பொது மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களை திரட்டுவோம். அந்நிய நேரடி முதலீடு (F.D.I.) எனும் சீரழிவு மசோதாவை தோற்கடிப்போம்.
  01.09.2014