திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Wednesday, July 04, 2012

09.07.2012 திங்கட்கிழமை மாலை 6-00 மணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  அனைத்து வட்டக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 


மாவட்ட நிர்வாகிகள்

திருப்பூர் மாவட்டம்.

Monday, February 13, 2012

28.02.2012 – அகில இந்திய வேலை நிறுத்தம்

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே வணக்கம்.

        அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முடிவின்படி

அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுதல்


வேலை நிறுத்த உரிமையை சட்டபூர்வ உரிமையாக்குதல்


பொது சேம நல நிதி வட்டி விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்துதல்


பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்
விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல்

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  
 
28.02.2012 அன்று நடைபெறும் 
'அகில இந்திய வேலை நிறுத்தத்தில்'  
 
அனைவரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.