திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, December 13, 2010

11.12.2010 - திருப்பூர் மாவட்டப் பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்ட நிகழ்வுகள்

                   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்டத்தின் இரண்டாவது மாவட்டப் பிரதிநிதித்துவப் பேரவை 11.12.2010 சனிக்கிழமை காலை 10-30 மணி முதல் உடுமலைப்பேட்டை பாலாஜி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.   மாவட்டத் தலைவர் தோழர் து.இராஜகோபாலன் தலைமை தாங்கினார்.  மாவட்ட இணைச் செயலாளர் ஆ.அம்சராஜ் வரவேற்புரையாற்றினார்.  தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர்      திரு எஸ்.பாலகிருஷ்ணன் பேரவையைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) செயலாளர் அறிக்கையையும். மாவட்டப் பொருளாளர் மு.சீனிவாசன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.   

        B.S.N.L.E.U. மாவட்டத் தலைவர் N.சக்திவேல் மற்றும் 
  C.I.T.U. மாநிலக் குழு உறுப்பினர் N.கிருஷ்ணசாமி ஆகியோர் 
  வாழ்த்துரையாற்றினர்.  

        திருப்பூர் வட்டக்கிளைத் தலைவர்கள் மு.கோவிந்தராஜுலு,; ஐ.முருகன் மாவட்டப் பொருளாளர் மு.சீனிவாசன், சத்துணவு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் திரு ஜெயபால்ராஜ் ஆகியோர் பாராட்டு பெற்றனர்.  

        மாநிலத் தலைவர் திருமதி இரா.தமிழ்செல்வி நிறைவுரையாற்றினார்.
        மாவட்டத் துணைத் தலைவர் திரு பி.விஜயகுமார் நன்றி கூறினார்.
       மாவட்டம் முழவதுமிருந்து 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கீழ்க்கண்ட மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்            :-                            D.இராஜகோபாலன்
செயலாளர்            :-                       C.நடராஜன்
பொருளாளர்            :-                    A.அம்சராஜ்
துணைத் தலைவர்கள்        :-     G. ஆறுமுகவள்ளல்
                                                              A. மணியன்
                                                              P. விஜயகுமார்
                                                             G. விஜயன்
இணைச்செயலாளர்கள்        :- R பாஸ்கரன்
                                                             S. முருகேசன்
                                                             R. ஜெனோவா
                                                             S. முருகசாமி    

மாலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊதிய மாற்றம் ஏற்றமா? ஏமாற்றமா? என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் திருமதி இரா.தமிழ்செல்வி விளக்கவுரையாற்றினார்.   திரு S. முருகசாமி     நன்றி கூறினார்.

No comments:

Post a Comment