ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை முடிவுகளின்படி 02.02.2011 அன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் து. இராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் செ. நடராஜன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தொலை தொடர்பு ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் முகமது ஜாபர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர். வடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மறியல் போராட்டத்திற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 205 ஆண் தோழர்களும், 176 பெண் தோழர்களுமாக 381 பேர் கைது செய்யப்பட்டு காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் தோழர் து.,ராஜகோபாலன் தலைமையில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் கோகுலராதா, பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் தோழர் ராஜேந்திரன், சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் ஆர்.ஜெனோவா, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் எம்.பாலசுப்பிரமணியம், சமூக நலத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் பி.விஜயகுமார், ரேடியோகிராபர்ஸ் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் க.ஆறுமுகவள்ளல், வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் ஜி.விஜயன், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர் என்.ஸ்ரீதர், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தோழர் என்.சுசீலா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் எம்.பாக்கியம், மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் குணராஜ், தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மேகலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக திருப்பூர் வட்டக் கிளைத் தலைவர் தோழர் வீ.வீ.மாரி, பல்லடம் வட்டக் கிளை பாலசுப்பிரமணியன், அவிநாசி வட்டக் கிளையின் தோழர் என்.பாஸ்கரன், தாராபுரம் வட்டக் கிளையின் செயலாளர் எஸ்.பழனிகுமார், காங்கயம் வட்டக் கிளையின் தோழர் ஆர்.ராமசாமி, அனைத்திந்திய தபால் ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கோட்டத் தலைவர் திரு என்.சுப்பிரமணியம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திரு ஏ.லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எஸ்.முருகசாமி நன்றி கூறினார். அனைவரும் மாலை 6-45 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment