திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முதல் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு 20.08.2010 வெள்ளிக்கிழமையன்று காலை 10-00க்கு மாவட்ட அமைப்பாளர் திரு எஸ்.முருகேசன் தலைமையில் தொடங்கியது. அச்சங்கத்தின் கொடியை மாநிலத் தலைவர் திரு கே. பழனிசாமி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) திரு செ.நடராஜன் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவருமான திரு து.இராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் திரு செ.நடராஜன் மாநாட்டினைத் துவக்கி வைத்தார். துமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு தோ. ஜான்கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டப் பொருளாளர் திரு சீனிவாசராகவன் மற்றும் ஈரோடு மாவட்டத் தலைவர் திரு எஸ்.சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் திரு அ.நிசார் அகமது “ நமது பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். மாநிலத் தலைவர் திரு கே.பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.
மாவட்டத் தலைவராக திரு எஸ்.முருகேசன், மாவட்ட செயலாளராக திரு கே.பால்ராஜ், மாவட்டப் பொருளாளராக திருமதி என்.சுசீலா, மாவட்டத் துணைத் தலைவர்களாக திரு பி.சண்முகசுந்தரம், திருமதி பி. ரீட்டா, திரு ஆர்.ராமசாமி, திரு வி.ஜெயபால்ராஜ், இணைச் செயலாளர்களாக திரு கே.கருணாகரன், திரு முத்தமிழ்ராஜ், திரு எஸ்.ஆறுமுகம், திரு எம்.கே.பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment