திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது Click Here

Monday, September 01, 2014

முன்னேற்றம் யாருக்கு?



Top of Form

மத்திய அரசின் முடிவுகளால் நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரமாக அவர் கூறியுள்ள  ஆதாரங்கள் என்னவென்றால் அன்றைய நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளில் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பன்னாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்துவது தான் பொருளாதார நிலையில் முன்னேற்றம் என்பதற்கான  பொருள். மேலும் முக்கியத் துறைகளை அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட இருப்பதாகவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நாட்டிற்கு பெருமையையும், வருமானத்தையும் ஈட்டித்தரும் காப்பீட்டுத் துறையை அந்நியருக்கு தாரைவார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை. மேலும் உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேத் துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்குத் தர இவர்கள் திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துள்ளதோடு ஊழல் புகார் காரணமாக சில ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது தடை செய்யப்பட் டிருப்பதையும் விலக்கிக் கொள்ள இருப்பதாக அருண்ஜெட்லி கூறியுள்ளதிலிருந்து ஊழலை ஒழிக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பு இவர்கள் முழங்கியதெல்லாம் வெறும் வெற்று வார்த்தை என்பதை புரிந்து கொள்ள முடியும். மோடி அரசு பொறுப்பேற்று செப்டம்பர் 2-ம் தேதி யுடன் நூறு நாட்கள் முடிவடைய உள்ளது.
இந்த நூறு நாட்கள் என்பது அந்நிய முதலாளிகளுக்கு ஆதாயத்தை பெருக்குவதாகவும், நாட்டின் பெரும் பகுதி மக்களின் துன்ப துயரங்களை அதிகரிக்கச் செய்வதுமாகவே இருந்து வந்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மறுபுறத்தில் விவசாய உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதையெல்லாம் சீர்செய்ய மோடி  அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மாறாக இந்திய முதலாளிகளை அழைத்துக்  கொண்டு ஜப்பான் சென்றிருக்கிறார் மோடி. இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் செல்ல இருக்கிறார்.
இந்த பயணங்கள் இந்திய முதலாளிகள் லாப வேட்டைக்கு உதவுமே அன்றி எளிய மக்களுக்கு கிடைக்கப் போவது எதுவுமே இல்லை. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டிலேயே இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பட்டினிச் சாவுகளை தடுக்கப் பயன் படும் இந்தத் திட்டத்தை பட்டினி போட்டு சாகடிக்க வேண்டும் என்பதுதான் மத்திய ஆட்சியாளர்களின் நோக்கம். மொத்தத்தில் மோடி நடத்துவது முதலாளிகளின் ஆட்சி. இது அடிப்படையில் மக்களுக்கு எதிரான ஆட்சி.

No comments:

Post a Comment