கூட்டத்தில் மாநில இணை அமைப்பாளர்கள் சே.க.விஜய பாண்டியன், மு.வரதரா ஜன், எஸ்.இராசேந்திரன், கே.தமிழ ரசி மற்றும் நிர்வாகக்குழு உறுப் பினர்கள் டி.ஆர்.மேகநாதன், ஏசய்யா குருபாதம், டி.டெய்சி, எம்.பரிமளா, பி.சுந்தரம்பாள், எஸ். சொர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டமைப்பு முன்னதாக எடுத்த முடிவின்படி வரும் 19ம் தேதியன்று தமிழக முதல்வரைச் சந்திக்க திட்டமிட்டு இருந்தோம். மேற்கண்ட தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் காலமாக இருப்பதா லும், தேர்தல் நடக்கும் இடங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாலும் சந்திப்பு இயக் கத்தை அக்டோபர் 10ம் தேதியன்று சென்னையில் நடத்திட முடிவு செய் யப்பட்டுள்ளது.
தனித்துறை, பணிவிதிகள் ஏற்ப டுத்தி பணிவரன்முறை
செய்தல், முழுநேர பணி நிரந்தரம் செய்து கல்வித்தகுதி அடிப்படையில் மாத
ஊதியம், மிஷன்மோடு என்ற பெய ரில் அங்கன்வாடி மையங்களை தனியாருக்கு
விடக்கூடாது. அரசு ஓய்வூதிய விதிப்படி அக விலைப் படியுடன் ஓய்வூதியம்,
குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரின் பார்வைக்கு
கொண்டு சென்று சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற அரசின் மிரட்டல்
மற் றும் அடக்குமுறைகளையும் மீறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
சென்னையில் திரள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment