1956ல் ரூ.5கோடி
மூலதனத்தில், 245 தனியார், அந்நிய இன்சூரன்ஸ் கம்பெனிகளின் முறைகேடுகள்
காரணமாக, தேச
உடமையாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும். 31.03.2014ல்
ரூ.17.69 லட்சம்
கோடி அளவிற்கு மக்களின் சேமிப்பை
திரட்டியுள்ளது. (இந்த வருட மத்திய அரசின் வரவு-செலவு ரூ.17 லட்சம் கோடிதான்) மேலும், நமது நாட்டில் ஊழல் அற்ற ஒரு மிகப்பெரிய
நிதித்துறை நிறுவனமாகவும்
உள்ளது. மத்திய அரசின் வருடாந்திர கடன் தேவையில் 25
சதவீதம் -
கால் பங்குஅளவை எல்.ஐ.சி.யே வழங்குகிற அளவிற்கு மக்களின்
காமதேனுவாக செயல்படுகிறது.
1956ல்
ரூ.5 கோடி
மற்றும் 2011ல்
ரூ.95 கோடி
கொடுத்து, மொத்தம்
ரூ.100 கோடி
மூலதனத்தில் செயல்படும் எல்.ஐ.சி. டிவிடெண்டாக மட்டும் சுமார் ரூ. 15,000 கோடியை 31.03.2014 வரை மத்திய அரசிற்கு
வழங்கியுள்ளது. இதுபோல
பல மடங்கு வருமான வரியாகவும், நிறுவன
வரியாகவும், சேவை
வரியாகவும் மத்திய
அரசிற்கு வழங்கும் மாபெரும் நிதித்துறை நிறுவனமாகும்.
2013 - 2014 -ல் சாதனை
1) 2048 கிளைகளை கொண்ட, 1,20,388 ஊழியர்கள், 12 லட்சம் முகவர்களை கொண்ட ஆயுள்
காப்பீடு நிறுவனமாகும். கடந்த ஆண்டு புது வணிகமாக 3.45
கோடி புதிய
பாலிசிகளையும்,
ரூ.90,123/- கோடி
முதல் வருட பிரீமியம் ஆகவும் வணிகம்
செய்துள்ளது. 23
தனியார், அந்நிய
கம்பெனிகளின் போட்டிகளுக்கிடையே, 84 சதவீதம்
பாலிசி அடிப்படையிலும், 75 சதவீதம்
பிரீமியம் அடிப்படையிலும்
இன்சூரன்ஸ் சந்தையை தக்க வைத்துள்ள மக்களின் நம்பிக்கைக்கு
பாத்திரமான ஒரே நிறுவனமாகும்.
எல்.ஐ.சி. க்கு அடுத்து 2வது
ஆக உள்ள ஐசிஐசிஐ புருடென்ஷியல்
நிறுவனம் 4 சதவீதம்
சந்தையைதான் வைத்துள்ளது.2) 2.59 கோடி பாலிசிதாரர்களுக்கு
ரூ.91,186 கோடி
முதிர்வு தொகையை கடந்த ஆண்டு மட்டும்
வழங்கியுள்ளது. 99.68
சதம் முதிர்வு தொகையையும்,
99.3 சதம் இறப்புக்கான
காப்பீட்டு தொகைகளையும் வழங்கியுள்ள, உலக சாதனை படைத்துள்ள, ஒரே நிறுவனம் ஆகும். இதில் 72 சதம் மக்களின் வங்கி கணக்கிலேயே
வழங்கப்படுகிறது.
3) 30 கோடி தனி நபர் ஆயுள்
காப்பீடு பாலிசிகள், 11.5 கோடி
குழு காப்பீடு பாலிசிகள்
என 41.50 கோடி
பாலிசிதாரர்களின் ஆயுளுக்கு பொருளாதார உத்தரவாதம் வழங்கியுள்ள உலகின் மிகப்பெரிய உயிர்
காக்கும் நிறுவன மாக சாதனை
படைத்துள்ளது எல்.ஐ.சி. என்ற மூன்று எழுத்து ஆகும். 41 கோடி என்ற எண்களை தாண்டியுள்ள, மக்கள் சீனத்தை தவிர, உலகில் வேறு நாடுகளே கிடையாது எனலாம்.4) 31.3.2014 முடிந்த கடந்த
வருடத்தில் மட்டும் எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம் ரூ.3,80,042/-
கோடியாகும். இது மத்திய பட் ஜெட்டின் 25 சதவீதமாகும் எனலாம். கடந்த ஆண்டின் மொத்த பிரீமிய
வருமானம் மட் டும் ரூ.2,36,798/- கோடியாகும்.
மக்களின் சேமிப்புக்கு ஏற்ற காப்பகமாக உள்ள ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும்.5) 31.03.2014 வரை மத்திய, மாநில அரசுகளிடம் செய்த முதலீடு ரூ.8,71,497/- கோடியாகும். வீட்டு
வசதிக்காக, மின்சாரம், குடிநீர்,
பாசனம், சாலை, தகவல் தொடர்பு வசதிக்காக என உள்கட்டமைப்பு
தேவைக்காக செய்த முதலீடு ரூ.1,98,272/-
கோடி ஆகும். ஆக
மொத்தம் ரூ.10,69,769/-
கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில்
வருடத்திற்கு ரூ.60,000/- கோடி
அளவிற்கு முதலீடு செய்து வரும், பங்குச்
சந்தைக்கு ஆபத்து வரும்போதெல்லாம்,
மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப பங்குச் சந்தைக்கும் முதலீடு செய்து
ஆபத்திலிருந்து அந்நிறுவனத்தையும்
காப்பாற்றி வந்துள்ளது எல்.ஐ.சி. இவ்வாறு பங்குச்சந்தைக்கும்
மறை முகமாக, இலவசமாக
ஆயுள் காப்பீடு செய்து வரும் இன்சூரன்ஸ் நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும்.
ஐந்தாண்டு
திட்டங்களுக்கு
எல்.ஐ.சி.2வது ஐந்தாண்டு திட்டத்தில் (1956 - 1961)ரூ.184 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.3வது ஐந்தாண்டு திட்டத்தில் (1961 - 1966) ரூ.285 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.4வது ஐந்தாண்டு திட்டத்தில் (1969 - 1974) ரூ.1,530 கோடி முதலீடு
செய்தது எல்.ஐ.சி.5வது
ஐந்தாண்டு திட்டத்தில் (1974 - 1979) ரூ.2,942 கோடி முதலீடு செய்தது
எல்.ஐ.சி.6வது
ஐந்தாண்டு திட்டத்தில் (1980 - 1985) ரூ.7,140 கோடி முதலீடு செய்தது
எல்.ஐ.சி.7வது
ஐந்தாண்டு திட்டத்தில் (1985 - 1990) ரூ.12,969 கோடி முதலீடு செய்தது
எல்.ஐ.சி.8வது
ஐந்தாண்டு திட்டத்தில்
(1992 - 1997) ரூ.56,097 கோடி முதலீடு செய்தது
எல்.ஐ.சி.9வது ஐந்தாண்டு
திட்டத்தில் (1997 - 2002) ரூ.1,70,929 கோடி முதலீடு செய்தது எல்.ஐ.சி.10வது ஐந்தாண்டு திட்டத்தில் (2002 - 2007) ரூ.3,94,779 கோடி முதலீடு
செய்தது எல்.ஐ.சி.11வது
ஐந்தாண்டு திட்டத்தில் (2007 - 2012) ரூ.7,04,151 கோடி முதலீடு செய்தது
எல்.ஐ.சி.12வது
ஐந்தாண்டு திட்டத்தில் (2012 - 2014) ரூ.4,51,460 கோடி முதலீடு (முதல்
இரண்டு வருடம் மட்டும்) செய்துள்ளது
எல்.ஐ.சி.. இவ்வாறு மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாபெரும் உதவி செய்யும் எல்.ஐ.சி.
நிறுவனத்தை மத்திய அரசே சீரழிக்க
அனுமதிக்கலாமா?
7) சிறப்பான பாலிசிதாரர் சேவை, ஊழலற்ற நிறுவனம்,
ஏழை, எளிய
மக்க ளுக்கு ஆயுள் காப்பீடு என தனியார்,
அந்நிய பகாசுர
கம்பெனிகளுடன் போட்டி போட்டு இந்திய அளவில் 31 பரிசுகளையும் வாங்கியுள்ள ஒரே
காப்பீட்டு நிறு வனமாகும் எல்.ஐ.சி. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகை நடத்திய
கருத்துக் கணிப்பில் மிகவும் அதிகம் நம்பிக்கையுள்ள முதல் தரமான நிறுவனமாக
எல்.ஐ.சி. உள்ளது (சூடி 1 ஆடிளவ
கூசரளவநன ஐனேயைn க்ஷசயனே)
என்பதை தெரிவித்துக்
கொள்கிறது. இந்த முதல் இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்தும் வருகிறது. இப்படிப்பட்ட மக்களின்
நம்பிக்கை நட்சத்திரத்தை சீரழிக்க
நினைக்கும் பா.ஜ.க. மோடி அரசை கண்டிப்போம். இந்த தவறை மோடி
அரசு திருத்திக் கொள்ளுமா? மக்கள் சக்தியால் இநத் தவறை திருத்த
முடியும். மக்களை திரட்டிடுவோம்.
8) எல்.ஐ.சி.யின் சமூகக் கடமை : ஆம் ஆத்மி
யோஜனா எனும்
திட்டத்தை உடல் உழைப்பு ஏழை தொழிலாளிக்கு வழங்கி தன்னுடைய நிறுவன சமுதாய
கடமையை சிறப்பாக செய்து வருகிறது எல்.ஐ.சி. 18
முதல் 59 வயது வரையில்
உள்ளவர்களுக்கு இயற்கை மரணத்திற்கு ரூ.30,000/-,
விபத்து
மரணத்திற்கு ரூ.75,000/-,
படிக்கும் குழந்தைகளுக்கு (9ம்
வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை) கல்வி உதவியாக ரூ.600 வருடத்திற்கு
2 முறை
வழங்கி வரும் திட்டத்திற்கு
ஆகும் பிரீமியம் ரூ.200/-. இதில்
ரூ.100/- ஐ
மானியமாக எல்.ஐ.சி.
யே வழங்குகிறது.இவ்வாறு சிறப்பாக செயல்படும் நிறுவனத்தை சீரழிக்க அந்நிய
முத லீட்டை
49 சதவீதம்
உயர்வு என்ற சீரழிவு மசோதாவை, தேச
விரோத மசோதா
என்று சொன்னால் தவாறாகாது என சொல்ல தோன்றுகிறது. இது ஒரு பொருளாதார பயங்கரவாத
செயல்என சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பொருளாதார
பயங்கரவாத செயலை அந்நிய முதலீடு என்று சொல்லி அனுமதிக்க வேண்டாம் என
மக்கள் கேட்கிறார்கள்.
இந்த
அந்நிய முதலீடுஉயர்வை எதிர்ப்பவர்களின்
செயல் ஒரு தேசபக்த செயலாகும். இந்த தேச பக்த செயலை எல்.ஐ.சி. ஊழியர்கள், இடது சாரிகள், அறிவு ஜீவிகள் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சக்திகள், பொது மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களை
திரட்டுவோம். அந்நிய
நேரடி முதலீடு (F.D.I.)
எனும் சீரழிவு மசோதாவை தோற்கடிப்போம்.
01.09.2014
we support
ReplyDelete